என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள்.
ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
- நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விசாரணையை நிறுத்தவில்லை என்றால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்ம் நடத்துவோம் என்றனர்.
நெல்லை:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்க த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அமலாக்கத்துறை மூலமாக மத்திய அரசு ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 3 நாட்களில் 30 மணி நேரத்திற்கு மேலாக ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தி உள்ளது. மத்திய அரசு திட்டமிட்டே அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது.
உடனடியாக அமலாக்க த்துறை விசாரணையை நிறுத்த வேண்டும். நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். விசாரணையை நிறுத்தவில்லை என்றால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்ம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், ஓ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர் டியூக்துரைராஜ், துணைத்தலைவர்கள் கவிபாண்டியன், பேட்டை சுப்பிரமணி, மண்டல தலைவர்கள் அய்யப்பன், கெங்கராஜ், நிர்வாகிகள் முகமது அனஸ்ராஜா, குறிச்சி கிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி. கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.