என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கவர்னர் ரவியை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  X

  கவர்னர் ரவியை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  கவர்னர் ரவியை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கவர்னர் ரவியை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • தமிழக ஆளுநருக்கு எதிராக விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

  விழுப்புரம்:

  சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு விரோதமாகவும் செயல்படும் கவர்னர் ரவியை பதவியில் இருந்து அகற்றக்கோரி விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை தாங்கினார்.

  ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி,மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம்,விழுப்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சிவா, ராஜ்குமார், நாராயணசாமி, நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் ராம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் ஐயர் கண்டன உரையாற்றினார்கள் அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் ஆர்.டி. சீனிவாச குமார் தலைமையில் தமிழக ஆளுநருக்கு எதிராக விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

  Next Story
  ×