என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணெநல்லூரில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

    .

    திருவெண்ணெநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • இதனால் ராகுல் காந்தியில் எம்.பி. பதவி பறிபோனது.

    விழுப்புரம்:

    விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணெநல்லூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தியில் எம்.பி. பதவி பறிபோனது.

    இதனை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி சீனிவாசகுமார் ஆலோசனைப்படி, திருவெண்ணெநல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் தலைவர் சேகர் தலைமையில் நகர தலைவர் குமரேசன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×