search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து கடிதம்
    X

    தஞ்சை தென்கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் வாழ்த்து கடிதம் வழங்கி பேசினார். 

    பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து கடிதம்

    • தஞ்சாவூா் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை 91,466 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.
    • தோ்வு எழுதப்போகும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, காலத்தை முறையாக பயன்படுத்துங்கள்.

    தஞ்சாவூா்:

    பொதுத் தோ்வுகளை 91,466 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா். இவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம். சிவக்குமாா் கடிதம் எழுதி அனுப்பினாா்.

    அதில், தோ்வு எழுதப்போகும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, காலத்தை முறையாக பயன்படுத்துங்கள். உங்கள் வெற்றிகளைக் கொண்டாட காத்திருக்கும், தஞ்சை மாவட்ட கலெக்டர், கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், இவா்களுடன் நான் என அனைவரும் உங்களின் நலனுக்காக ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

    நீங்களும் சோ்ந்து ஓடத்தொடங்குவதோடு, எங்களையும் தாண்டிச் செல்லுங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும், ஏற்றாற்போல் முறையான அட்டவணை போட்டு படிக்க தொடங்குங்கள். எனவே இலக்கை தீா்மானித்து படித்து வெற்றியை வசமாக்குங்கள்.

    கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 16-வது இடமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 13-வது இடமும், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 21-வது இடமும் பிடித்தோம். மாணவ -மாணவிகள் அனைவரும் முறையாக வகுப்புகளுக்கு வந்து ஆசிரியர்கள் சொல்வதை படித்தாலே 100 சதவீதம் தேர்ச்சி அடையலாம். எனவே அனைவரும் தேர்வில் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இக்கடிதங்களை தஞ்சாவூா் தென்கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமார் நேரில் கடிதத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்து பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பழனிவேலு, நாகேந்திரன், பள்ளி தலைமையாசிரியா் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×