என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வருகிற 7-ந்தேதி மாலை நெல்லை வரும் முதல்-அமைச்சருக்கு 3 இடங்களில் உற்சாக வரவேற்பு -மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தகவல்
  X

  முதல்-அமைச்சர் வருகையையொட்டி நெல்லை கொக்கிரகுளம் மேம்பாலத்தில் வர்ணம் தீட்டப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.

  வருகிற 7-ந்தேதி மாலை நெல்லை வரும் முதல்-அமைச்சருக்கு 3 இடங்களில் உற்சாக வரவேற்பு -மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாவட்டத்திற்கு நாளை மறுநாள்(புதன்கிழமை) மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
  • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் பாளை மகாராஜநகரில் நடைபெற்றது.

  நெல்லை:

  நெல்லை மாவட்டத்திற்கு நாளை மறுநாள்(புதன்கிழமை) மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

  இதனையொட்டி அவருக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம் பாளை மகாராஜநகரில் நடைபெற்றது.

  இந்த கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி பேசுகையில், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக நெல்லை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். குமரியில் இருந்து மாலை 5 மணிக்கு நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு வந்தடையும் அவருக்கு அந்த பகுதியில் ராதாபுரம் தொகுதி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

  இதேபோல் நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே அந்த தொகுதி சார்பிலும், பொன்னாக்குடி விலக்கு அருகே அம்பை தொகுதி மற்றும் பாளை ஒன்றியங்கள் இணைந்தும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினார்.

  இதில் மாவட்ட பொரு ளாளர் ஞானதிரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நகராட்சி சேர்மன்கள் பிரபாகர பாண்டியன், செல்வசுரேஷ் பெருமாள், சாந்தி, பேரூராட்சி தலைவர் தமயந்தி, யூனியன் தலைவர்கள் பரணி சேகர், கே.எஸ்.தங்கபாண்டியன், சேவியர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், பி.சி. ராஜன், சுடலைகண்ணு, வேலன்குளம் முருகன், முத்து பாண்டி என்ற பிரபு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×