என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

    • கல்லூரியில் விசாரித்த போது அஸ்வினி கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.
    • ராஜசேகர்ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி புதுநகர் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் அஸ்வினி (வயது 20), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். மாலை வீடு திரும்ப வில்லை. கல்லூரியில் விசாரித்த போது அஸ்வினி கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.

    பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் காணாமல் போன பெண்ணின் தந்தை கணேசன் புகார் கொடுத்தார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜசேகர்ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி அஸ்வினியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×