என் மலர்
உள்ளூர் செய்திகள்

20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வரும் மக்கள் வசிக்கும் கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
- கடந்த ஜூன் 12-ந்தேதி முதல் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோா்கள் போராட்டம் நடத்தினர்
- தட்டனேரி, பன்னிமாரா கிராமங்களில் கலெக்டர் அம்ரித் மற்றும் வருவாய் துறையினா் ஆய்வு நடத்தினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனேரி, பன்னிமாரா கிராமங்களில் வசித்து வரும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டு வந்த பழங்குடியினா் சாதி சான்றிதழ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 12-ந்தேதி முதல் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோா்கள் போராட்டம் நடத்தி வந்தனா்.
இந்நிலையில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா, கலெக்டர் அம்ரித் ஆகியோா் நடத்திய பேச்சு வாா்த்தையில், மலைவேடன் பழங்குடியினா் மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, 18-ந்தேதி முதல் 80 பள்ளி மாணவ, மாணவிகளை பெற்றோா்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனா்.
இதை தொடர்ந்து தட்டனேரி, பன்னிமாரா கிராமங்களில் கலெக்டர் அம்ரித் மற்றும் வருவாய் துறையினா் ஆய்வு நடத்தினா். இந்த கிராம மக்களின் குடும்ப தலைவா்கள், தலைவிகள் குறித்த விவரங்கள் குறித்து எழுத்து பூர்வமாக வருவாய் துறையினரிடம் அளிக்க கலெக்டர் உத்தர விட்டார்.






