என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில்  பழுதான அங்கன்வாடி கட்டிடங்களில் கலெக்டர் ஆய்வு
    X

    உடன்குடியில் பழுதான அங்கன்வாடி கட்டிடங்களில் கலெக்டர் ஆய்வு

    • உடன்குடி பகுதியில் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்துமிகவும் மோசமான நிலையில் உள்ளது.
    • கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டு புதியகட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்துமிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து உடன்குடி பேரூராட்சி தலைவி ஹீமைரா ரமீஷ்பாத்திமா அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணணிடம் கோரிக்கை மனுஅளித்தார். இதனையடுத்து அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் செந்தில்ராஜ் அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத மிகவும் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அப்புறபடுத்தி விட்டு விரைவில் புதியகட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, பேரூராட்சி தலைவி ஹுமைரா, தாசில்தார் சுவாமிநாதன், செயல்அலுவலர் பாபு, பேரூராட்சி கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், பாலாஜி, அன்புராணி, பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷாகல்லாசி, அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×