என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
- குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடையில் அதிகளவில் மழை நீர் சென்று கொண்டுள்ளது.
- கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குமார பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடையில் அதிகளவில் மழை நீர் சென்று கொண்டுள்ளது. மழையின் காரணமாக பள்ளியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், ஒலப்பாளையம் பகுதி, கத்தேரியில் மழை யின் காரணமாக ஏரியில் நீர் நிரம்பியதால் நீர் முழுவதும் அப்பகுதியில் உள்ள வாய்கால்களில் வெளியேறுவதை பார்வை யிட்டு ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றுமாறு வருவாய் மற்றும் பொதுப்ப ணித்துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, குமார பாளையம் தாசில்தார் தமிழரசி,ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன், தலைமை ஆசிரியர்கள் ஆடலரசு, சிவகாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உள்பட பலர் உடனிருந்தனர்.






