என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பு தடுப்புகளால் மூடப்பட்ட கோவை தடாகம் சாலை

    • எந்த வழியாக செல்வது என தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
    • இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    குனியமுத்தூர்,

    கோவை தடாகம் ரோட்டில் வெங்கிட்டா–புரத்தில் இருந்து கோவில்மேடு வரை பில்லூர் குடிநீர் திட்டம் பணி காரணமாக நடுரோட்டில் ஆங்காங்கே குழி தோண்டி சாலையை மறித்து வேலை நடைபெற்று வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுதவிர இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இடையர்பாளையம், டி.வி.எஸ் நகர், சிவாஜி காலனி, கே.என்.ஜி புதூர், கணுவாய், ஆனைகட்டி பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த வழியாக தான் செல்ல வேண்டும்.

    இதனால் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகளால் அடைத்து வைத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைவதுடன், எந்த வழியாக செல்ல வேண்டும் என குழப்பமும் அடைகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- சம்பந்தப்பட்ட துறையினர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சாலையை அடைப்பது சரியான முறை அல்ல. இந்த தேதி முதல் இந்த தேதி வரை பராமரிப்பு பணி காரணமாக இச்சாலை அடைக்கப்படும் என முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.

    எதுவுமே இல்லாமல் திடீரென்று சாலையை அடைப்பது பொது மக்களை அலைக்கழிக்க வைப்பதாகும். உள்ளூரில் குடியிருப்பவர்களுக்கு பாதை தெரியும். அவர்கள் குறுக்குப்பாதை வழியாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வார்கள். ஆனால் பிற பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வருபவர்களுக்கு குறுக்குப் பாதை எங்கு இருக்கிறது என தெரியாது.

    கோவையில் உள்ள சாலைகளில் தடாகம் சாலை மிகவும் பிரதான சாலை ஆகும். இருசக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும், பஸ்களும் 24 மணி நேரமும் சென்று கொண்டே இருக்கும்.

    அப்படிப்பட்ட முக்கியமான சாலையில் இவ்வாறு செய்வது சரியானது அல்ல. இதனால் பள்ளி கல்லூ ரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்ப டுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பணியை முடித்து விரைவில் சாலையைத் திறக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை யாகும்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் செயல்படும் எந்த ஒரு வேலைகளும், 4 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும். பின்னர் வேலையை தொடங்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாற்று வழி ஏற்படு த்துவார்கள். இல்லை யென்றால் இதுபோன்று, தான் நடக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது இதனை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×