என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்படும் நேரம் மாற்றம்
    X

    கோவை ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்படும் நேரம் மாற்றம்

    • தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
    • மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை நேரமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    கோவை,

    இந்திய அஞ்சல் துறை யுஐடிஏஐ உடன் இணைந்து புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

    கோவை ரெயில்வே சந்திப்பு வளாகத்தில் இயங்கி வரும் கோவை ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது இச்சேவை மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை நேரமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை ஆர்.எம்.எஸ். கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×