என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகராட்சி 100-வது வார்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் கூட்டம்
    X

    கோவை மாநகராட்சி 100-வது வார்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் கூட்டம்

    • சில நேரங்களில் சாலையை கடக்க முயலும் பாம்புகள் சாலையில் வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பதையும் பார்க்க முடிகிறது.
    • அச்சத்தில் உறைந்திருக்கும் பொதுமக்கள்

    குனியமுத்தூர்,

    கோவை-பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் அடுத்து கோவை மாநகராட்சி 100-வது வார்டு பகுதி உள்ளது. இந்த வார்டில் ஐஸ்வர்யா நகர், அண்ணாபுரம், கார்மல் நகர் உள்பட பல்வேறு பகுதி கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் பாம்புகள் புகுவதால், குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழும் பெண்கள் மிகவும் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    ஐஸ்வர்யா நகரில் புது பள்ளிவாசலுக்கு பின்புறம் கிணறு ஒன்று உள்ளது. இதிலிருந்து தான் பாம்புகள் அதிகளவில் வருகிறது.

    தற்போது இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. இதனால் சாலையோரம் உள்ள புதர்கள் மற்றும் செடி, கொடிகள் அகற்றப்படுகிறது.அங்கிருந்தும் பாம்புகள் வெளியேறி குடியிருப்பு பகுதி–களுக்குள் வந்துவிடுகிறது. இதன் காரணமாக அங்கு இருக்கவே அச்சமாக உள்ளது.

    சில நேரங்களில் சாலையை கடக்க முயலும் பாம்புகள் சாலையில் வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பதையும் பார்க்க முடிகிறது.

    தற்போது பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள் தெருக்களில் விளையாடுவார்கள். அப்படிபட்ட சமயங்களிலும் பாம்புகள் தெருக்களில் வருவதால் குழந்தைகளை வெளியில் அனுப்பவே பயமாக உள்ளது.

    எனவே கோவை மாநகராட்சி 100-வது வார்டு பகுதியில் சுற்றி திரியும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.கோவை மாநகராட்சி 100-வது வார்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் கூட்டம்

    கோவை மாநகராட்சி 100-வது வார்டுக்குள் படையெடுக்கும் பாம்புகள் கூட்டம்

    Next Story
    ×