என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா: மு.க. ஸ்டாலின் ட்வீட்

- சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கையுடன் உயர் சிறப்பு மருத்துவமனை
- 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ''கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வெளியிட்டு, அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'!'' என பதிவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை 6 மணிக்கு திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழை வெளியிட்டு இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.