search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    வள்ளலார் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

    திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • வள்ளலார் வழியில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • தமிழ் மண்ணின் பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்பு தபால் உறை, லோகோ, சிறப்பு மலர் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:


    அமைச்சர் சேகர்பாபு ஆன்மீக செயற்பாட்டாளர். கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்லும் அமைச்சர் சேகர்பாபு. கோயில்களில் நடைபெறும் அறப்பணிகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார். வள்ளலாரை போற்றுவது திமுக அரசின் கடமை. வள்ளலார் பிறந்த நாளையொட்டி ஓராண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும், வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.

    பசி பிணியை தடுத்த வள்ளலார் வழியில் நடக்கும் திமுக அரசு, பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்து வருகிறது. சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது. சமூக நல்லிணக்கம் வேண்டும். திமுக அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது என சிலர் பரப்பி வருகிறார்கள். திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×