search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவநிலை மாற்றத்தால் மா மரங்களில் பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிப்பு
    X

    கோப்புபடம்

    பருவநிலை மாற்றத்தால் மா மரங்களில் பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிப்பு

    • ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும்.
    • காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணல் கலந்த செம்மண் பரப்பு மா சாகுபடிக்கு உகந்த மண் வளமாகும். இந்த வளம் மிகுந்த ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, மானுப்பட்டி, ஒன்பதாறு செக்போஸ்ட், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.செந்தூரம், நீலம், மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா உட்பட 10-க்கும் மேற்பட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும். கொத்து கொத்தாக காய்கள் பிடித்து கார்பைட் போன்ற ரசாயன பயன்பாடு இல்லாமல்மரங்களில் மாங்காய்கள் பழுக்கும் போது அப்பகுதியில் பரவும் மணம்மக்களை மட்டுமல்லாது மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள யானைகளையும் இழுப்பது வழக்கம்.ஆனால் இந்தாண்டு மரங்களில் பூ பிடிக்கும் தருணத்தில், பெய்த மழை கோடை காலத்தில் போதிய வெயில் இல்லாதது போன்ற காரணங்களால் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும். சந்தை நிலவரத்தை பொறுத்து கிலோவிற்கு 50 ரூபாயிலிருந்து விலை கிடைக்கும். இந்த வருவாயே எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இந்தாண்டு ஜூன் மாத சீசன் கைகொடுக்கவில்லை. மரங்களில் பூக்கள் உதிர்ந்து தற்போது தழைவு துவங்கியுள்ளது. இதனால்காய் பிடிக்காமல் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளதுஎன்றனர்.

    Next Story
    ×