search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 22-ந் தேதி தொடக்கம்
    X

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 22-ந் தேதி தொடக்கம்

    • விடுமுறைக்கு பின் இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது.
    • மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்கும் வகையில் ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டு ள்ளது.

    கோவை,

    கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    கோவை அரசு கலைக்க ல்லூரியில் இளங்கலை படிப்பில் பி.ஏ.தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம், பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்பட மொத்தம் 23 துறைகள் உள்ளன. தவிர, முதுகலை படிப்புகளும் வழங்கப்படு கிறது.

    இந்நிலையில், பருவ த்தேர்வு விடுமுறைக்கு பின் இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது.

    முதல்நாள் என்பதால் மிகவும் குறைவான அளவில் மாணவர்கள் வந்தனர். நடப்பாண்டில் இளங்கலை யில் உள்ள 23 பட்ட படிப்பில் மொத்தம் 1433 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

    இதில் மொத்தம் உள்ள 1433 இடங்களில் 1362 பேர் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 71 இடங்களை தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வருகிற 22-ந் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. மாணவர்களை வரவேற்க கல்லூரி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்ப ட்டுள்ளன. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் நாகரிகமான உடையை அணிந்து வரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்கும் வகையில் ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டு ள்ளது.

    சீனியர்கள் யாராவது ராகிங் செயலில் ஈடுபட்டால், மாணவர்கள் புகார் அளிக்க புகார் பெட்டிகளும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். கல்லூரி வளாகத்தில் அடையாள அட்டை அணியாத மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனுமதியில்லை எனவும், இது தொடர்பாக கண்காணிக்க சிறப்பு குழு ஏற்படு த்தப்பட்டு உள்ளதாக வும் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×