என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா
  X

  சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
  • அய்யப்பசாமிக்கு களபா பிஷேகம், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

  கோவை,

  கோவை சித்தாபுதூரில் அய்யப்பசாமி பொற்கோவில் உள்ளது.

  இந்த கோவிலில் அய்யப்ப சாமி ஸ்ரீ சக்ரத்தில் வீற்றிருக்கிறார். சபரி மலையில் கடைப்பிடிக்கின்ற ஆச்சார அனுஷ்டானங்கள் இந்த கோவிலில் பின்பற்றப்படுகிறது.

  இந்த கோவிலின் 54-வது உற்சவ திருவிழா மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தின் 68-வது ஆண்டு விழா நாளை 20-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவிலின் தந்திரி பிரம்மஸ்ரீ பாலக்காட்டிலத்து சிவபிர சாத் நம்பூதிரி தலைமையில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் பரஞ் சோதி முன்னிலையில் கொடி யேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

  தொடர்ந்து முத்தா யம்பிகை செண்டை மேளம் நடைபெறும். 21-ந் தேதி 2-ம் திருவிழாவில் விநாய கருக்கு சிறப்பு பூஜையும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நிறைபிறை சமர்ப்பித்தல் நடைபெறும்.

  இரவு 7.30 மணிக்கு நாட்டிய நாடகம் நடைபெறும். 22-ந் தேதி 3-ம் திருவிழாவன்று, அய்யப்பசாமிக்கு களபா பிஷேகம், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண குசேலா என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் நடைபெறுகிறது.

  23-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவு 7.30 மணிக்கு பத்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் கலந்து கொள்கிறார். 24-ந் தேதி நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு நாட்டிய மாலை நிகழ்ச்சி நடைபெறும்.

  நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 25 -ம் தேதி 6-ம் திருவிழா அன்று காலை பிரம்ம ரக்ஷஸிற்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு ஐயப்ப சேவா சங்கத்தின் 68- வது ஆண்டு விழா நடக்கிறது.

  இரவு 7.30 மணிக்கு இசைத்தென்றல் கலை மாமணி வீரமணி ராஜூ குழுவினர் வழங்கும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சி யில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

  26-ம் தேதி 7-ம் திருவிழாவன்று காலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, அதன்பின் அய்யப்பசாமி அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளில் பள்ளி வேட்டை நிகழ்ச்சிக்கு எழுந்தருள்வார்.

  செண்டை மேளம், பஞ்சவாத்தியத்துடன் ஆவாரம்பா–ளையம் விநா யகர் கோவிலில் புறப்பட்டு பாரதியார் ரோடு, வி.கே.கே. மேனன் ரோடு சந்திப்பு வழியாக கோவிலை அய்யப்பசாமி வந்தடைவார்.

  27-ந் தேதி 8-ம் திருவிழா வன்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருக்கணிதரிசனம், விஷ்ணுவிற்கு சிறப்பு பூஜைகள் மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட 3 யானைகளில் அய்யப்ப சாமி திருவீதி உலா வருவார்.

  திருவிதி உலா நிகழ்ச்சியில் காவடி, சிங்காரி மேளம், செண்டை மேளம், பஞ்ச வாத்தியம் ஆகியவற்றுடன் பக்தர்கள் புடை சூழ சின்னசாமி ரோடு, சத்தி ரோடு, கிராஸ்கட் ரோடு, 11- ம் நம்பர் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆறாட்டு குள த்திற்கு அய்யப்ப சாமி வந்தடைவார். இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

  திருவிழா நாட்களில் தினசரி காலை யானை மற்றும் மேள வாத்தியத்துடன் சீவேலியும், மாலை 5 மணிக்கு காட்சி சீவேலியும் நடைபெறும்.

  இந்த தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கே.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×