search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்கள் போதை பொருள், கஞ்சா மற்றும் செல்போன் உபயோகம் செய்யகூடாது. மேலும் தவறான நபர்களிடம் பழக கூடாது.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகு குறித்த விழிப்புணர்வு முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் சாலமோன் வரவேற்று பேசினார்.சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி மற்றும் சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தனர். சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா மாணவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கினார். மாணவர்கள் போதை பொருள், கஞ்சா மற்றும் செல்போன் உபயோகம் செய்யகூடாது. மேலும் தவறான நபர்களிடம் பழக கூடாது.குழந்தை திருமணம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.தமிழ்நாட்டில் சிறார் அதிக அளவில் குற்ற சம்பவங்களில் நடைபெறும் இரண்டாவது மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் திகழ்கிறது என கூறினார்.

    மேலும் சாயர்புரம் உதவி காவல் ஆய்வாளர் முனியசாமி மாணவர்களிடம் 18 வயது நிரம்பிய பிறகு லைசென்ஸ் எடுத்த பின்னர் வாகனங்கள் ஒட்டவேண்டும்.குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் ஏற்பாடு செய்து இருந்தார்.

    Next Story
    ×