search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்- ராஜா எம்.எல்.ஏ. பேச்சு
    X

    செயல்வீரர்கள் கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம். அருகில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு உள்ளார்.

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்- ராஜா எம்.எல்.ஏ. பேச்சு

    • பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்து தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன் தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், மார்ச் 1- ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக கொண்டாட வேண்டும், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்து தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குவது, காச நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ரத்ததானம் வழங்குவது,மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள், மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய செய லாளர்கள் பெரியதுரை, மதி மாரிமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், தேவா , வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, சங்கரன்கோவில் மாரிசாமி, பராசக்தி, மாரிசாமி, மகேஸ்வரி, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா , பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பக விநாயகம், ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபிபாலசுப்பிரமணியன், திருவேங்கடம் மாரிமுத்து, பேரூராட்சி தலைவர்கள் சிவகிரி கோமதிசங்கரி, ராயகிரி இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×