search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓவியம்
    X

    செஸ் விழிப்புணர்வு ஓவியத்துடன் மாணவ-மாணவிகள்.




    புளியங்குடி பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓவியம்

    • செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    புளியங்குடி:

    சென்னையில் நடைபெறும் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட செஸ் தம்பி லோகோவை தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்தி வருகிறது.

    புளியங்குடி கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிகள் செஸ் தம்பி லோகோவை 200 கிலோ கோலப் பொடியில் 4 மணி நேரத்தில் வரைந்து அசத்தினர்.

    மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஓவியம் வரைந்த மாணவிகளையும், செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும் பள்ளி சேர்மன் சுபாஷ் கண்ணா, நிர்வாக இயக்குனர் பார்கவி கண்ணா, பள்ளி தலைமை ஆசிரியை அன்னகளஞ்சியம் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×