என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சென்னை போக்குவரத்து போலீசார் அதிரடி: ஸ்டாப்லைன் கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் சென்னை போக்குவரத்து போலீசார் அதிரடி: ஸ்டாப்லைன் கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/28/1842373-cross-the-line-fined.webp)
X
சென்னை போக்குவரத்து போலீசார் அதிரடி: 'ஸ்டாப்லைன்' கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம்
By
மாலை மலர்28 Feb 2023 7:43 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் கடந்த வாரம் முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
- 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினார்கள்.
சென்னை :
சென்னை போக்குவரத்து போலீசார் போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருத்தல் போன்ற விதிமீறல் குற்றங்களுக்கு அதிக அளவில் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் கடந்த வாரம் முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முதல் 'ஸ்டாப்லைன்' கோட்டை தாண்டும் விதிமீறல் குற்றத்துக்காகவும் ரூ.500 அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதற்காக போலீசார் நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினார்கள். இதுபோன்ற அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X