search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சேறை சாரநாதபெருமாள் கோவிலில் தேரோட்டம்
    X

    திருச்சேறை சாரநாதபெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

    திருச்சேறை சாரநாதபெருமாள் கோவிலில் தேரோட்டம்

    • தைப்பூசவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது.

    பட்டிஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்து ள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவில் தைப்பூச திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது,

    மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15 வது திவ்ய தேசமான

    இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. ஆதலால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சாரநாதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.தலத்தின் பெயரும் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது.

    காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது என்பது தலவரலாறாகும்.

    மேலும் கங்கை நதியை விட மேலான சிறப்படைய தவமிருந்த காவிரித் தாய்க்கு பெருமாள் மழலையாக எழுந்தருளி வரமருளிய தினம் இத் தைபூசத் தினமாகும்.

    இந்நிகழ்வை ஆண்டு தோறும்தைப்பூசப் பெரு விழாவாகதிருச்சேறை தலத்தில் அமையப்பெ ற்றுள்ள சாரநாதப் பெருமாள் கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச விழாவானது கடந்த ஜன.28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது,

    இவ்விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை மங்கல இன்னிசை முழங்க, அருளும் சாரநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் (பஞ்ச லட்சுமிகளுடன்) திருத்தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து தேர் வடம் பிடித்தார்கள்.

    இவ்விழாவினை தொடந்து இன்று இரவு 7- 30 மணிக்கு கோவில் திருக்குளமான சாரபுஷ்கரணியில் காவிரித்தாய்க்கு பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்வும், தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது இவ்விழா ஏற்பாடுகளை

    ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×