search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சாம்பியன் மாரத்தான் போட்டி
    X

    பரிசளிப்பு விழா நடைபெற்றபோது எடுத்த படம்.

    கோவில்பட்டியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சாம்பியன் மாரத்தான் போட்டி

    • காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு பெற்றது.
    • 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப்பரிசு,கேடயம் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாம்பியன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி மாதாங்கோவில் தெரு, எட்டையாபுரம் சாலை, புதூர்ரோடு, ரெயில் நிலையம், வழியாக எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் நிறைவு பெற்றது.

    இதில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், 2-வது பரிசு 2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 1,000 மற்றும் 7 பேர்களுக்கு ஊக்க பரிசாக ரூ. 500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி செயலர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் காமராஜ் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி உதவி பேராசிரியர் சந்திரன், கல்லூரி அனைத்துதுறை உதவி பேராசியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×