என் மலர்
உள்ளூர் செய்திகள்

வென்றவர்களுக்கு தகுதிநிலை பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கராத்தே கலர் பெல்ட் கிரேடிங் தேர்வில் வென்றவர்களுக்கு சான்றிதழ்
- 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் சிறப்பாக செய்து காண்பித்து சான்றிதழ் பெற்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வின்னர் மல்டிமியூரல் அகாடமி மற்றும் ஹயாஷிகா கராத்தே கழகம் சார்பில் கராத்தே கலர் பெல்ட் கிரேடிங் தேர்வு ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மலேசியாவில் இருந்து வந்த கிராண்ட் மாஸ்டர் ஹன்சி டாக்டர் டோனி பொன்னையா தலைமையில் கராத்தே கிரேடிங் தேர்வு நடைபெற்றது.
இதில் மாணவர்கள் சிறப்பாக செய்து காண்பித்து தகுதிநிலை பெல்ட் மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
வின்னர் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஷிஹான் ராஜேஷ்கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியாளர்கள் சங்கீதா, அருண், கிருஷ்ண தேவராயன், ரோகித் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
Next Story






