search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு விழா - நாளை கொண்டாட்டம்
    X

    எஸ்.பி. பொன்னையா நாடார்

    நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு விழா - நாளை கொண்டாட்டம்

    • நெல்லை - திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23-ல் முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
    • நெல்லை, திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு சார்பில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    ஆறுமுகநேரி:

    நெல்லை - திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அயராது முயற்சி எடுத்தவர் அன்றைய காலகட்டத்தில் நெல்லை ஜில்லா போர்ட் மெம்பரான ஆறுமுகநேரி எஸ்.பி. பொன்னையா நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை, திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு நிறைவு விழா ஆறுமுகநேரி ெரயில்வே வளர்ச்சி குழு சார்பில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. முருகேசபாண்டியன் வரவேற்று பேசுகிறார். ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் எஸ்.பி. பொன்னையா நாடார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, நாசரேத், நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களிலும் இந்த நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முக்கியமான நான்கு ரெயில்களின் முகப்பில் தோரணங்கள் அமைக்கப்படுகின்றன. ரெயில்வே பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆறுமுகநேரி ரெயில்வே வளர்ச்சி குழு தலைவர் பி.ஆர்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் ரா.தங்கமணி , நிர்வாகி பி.எஸ்.முருகன் உள்பட பலர் செய்து வருகின்றனர்

    Next Story
    ×