என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு
- புன்னம் சத்திரம் மற்றும் காந்தி நகரில் குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு
- தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வேலாயுதம்பாளையம் போலீசார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே காந்திநகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் காந்திநகர்பகுதியில் உள்ள அந்த கடையில் சோதனை நடத்திய போது ஏராளமான புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அபுரோஜ் (59) என்பவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இதே போல புன்னம் சத்திரம் அருகே உள்ள மளிகை மற்றும் டீக்கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, புன்னம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கௌரி(45), கரியாம்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி(53) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






