என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடுவட்டத்தில் 150 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
ஊட்டி மலைப்பாதையில்150 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்: 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- நடுவட்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.
கூடலூர் :
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஊட்டி நோக்கி மலைப்பாதையில் கார் ஒன்று சென்றது. அப்போது நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலையோரம் வைத்து இருந்த அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது மோதியது. தொடர்ந்து தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்து சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காரில் இருந்த பெண் உள்பட 2 பேரை லேசான காயங்களுடன் மீட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூடலூரை சேர்ந்த நான்சி உள்பட 2 பேர் என்பது தெரிய வந்தது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது.






