என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் அருகே அமைச்சரின் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி
    X

    அமைச்சரின் கார்

    மாமல்லபுரம் அருகே அமைச்சரின் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி

    • ஜான்சன், மனைவியுடன் கடலூரில் இருந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
    • ஜான்சனும், அவரது மனைவியும் சுமார் 50 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டனர்.

    மாமல்லபுரம்:

    கடலூர், சேனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது35). மீனவர். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    நேற்று மாலை ஜான்சன், மனைவியுடன் கடலூரில் இருந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அமைச்சர் மெய்யநாதனின் கார் திடீரென எதிரே வந்த ஜான்சனின் மோட்டார் சைக்கிளில் மோதியது.

    இதில் ஜான்சனும், அவரது மனைவியும் சுமார் 50 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜான்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது மனைவி உஷா பலத்த காயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    விபத்து நடந்தபோது அமைச்சர் மெய்யநாதன் காரில் பயணம் செய்யவில்லை. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்று இருந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வருவதற்காக கார் சென்றதாக கூறப்படுகிறது. முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×