search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி பேசினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் (அணி எண்:-37), ஐ.கியூ.ஏ.சி. மற்றும் வள்ளியூர் பல்நோக்கு சமூகசேவை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி பேசினார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் வாழ்த்தி பேசினார்.

    வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் டாக்டர் விதுபாலா புற்றுநோய் குறித்து விளக்கி கூறினார். மாணவர் சுதர்சன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×