என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே சிறுத்தையை பிடிக்க தேயிலை தோட்டத்தில் கூண்டு அமைப்பு
    X

    சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தேயிலை தோட்டத்தில் கூண்டு வைத்த காட்சி.

    கூடலூர் அருகே சிறுத்தையை பிடிக்க தேயிலை தோட்டத்தில் கூண்டு அமைப்பு

    • வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி னார்.
    • வண்டி ப்பெரியாறு, மூங்கிலாறு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் 3 இடங்களில் வனத்துறையி னர் கூண்டு வைத்தனர்.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லை ப்பகுதியான வண்டிப்பெரி யாறு, மூங்கிலாறு அருகே வனப்பகுதியையொட்டி தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு எஸ்டேட் மற்றும் குடியிருப்புகளில் வளர்க்கப்பட்டு வரும் பசு மற்றும் மாடுகளை கடந்த சில நாட்களாக சிறுத்தை கொன்று வந்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையிரிடம் புகார் அளித்தனர். தேக்கடி ரேஞ்சர் அனில்குமார் தலைமையில் வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி னார். இதில் சிறுத்தை வந்து செல்வது உறுதி செய்ய ப்பட்டது.

    இதனையடுத்து வண்டி ப்பெரியாறு, மூங்கிலாறு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் 3 இடங்களில் வனத்துறையி னர் கூண்டு வைத்தனர். சிறுத்தை சிக்கும் வரை சுழற்சி முறையில் வனத்து றையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக வும் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி இதே போல் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தையை பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி க்குள் வனத்துறையினர் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×