search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேம்பாலம், பாதாள சாக்கடை பணிகளால்  சேலம்- ஆத்தூர் சாலையில் தினமும் போக்குவரத்து நெருக்கடி
    X

    மேம்பாலம், பாதாள சாக்கடை பணிகளால் சேலம்- ஆத்தூர் சாலையில் தினமும் போக்குவரத்து நெருக்கடி

    • தினமும், 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
    • பராமரிப்புப் பணிகள் செய்யப்படுவதால் மேம்பாலப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையானது, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேலத்துடன் இணைக்கிறது. அது மட்டுமின்றி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் இந்த வழியாக சென்னை செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றன.

    தினமும், 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. ஆனால்,பராமரிப்புப் பணிகள் செய்யப் படுவதால் மேம்பாலப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள்,ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் போக்கு வரத்து நெருக்கடி யில் சிக்கி தவிக்கின்றனர்.

    அம்மாப்பேட்டை சாலையில் பலமாதங்களாக பாதாள சாக்கடைப் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, சாலை யின் ஒரு பகுதி பல மாதங்களாக சாலையின் மூடப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.

    மழையின்போது, சாலை முழுவதும் குளம்போல மழை நீர் தேங்கிவாகனப் போக்குவரத்து தடைப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிள்ளது.இதேபோல், சாலையின்குறுக்கே உள்ள ரெயில்வே கேட்டுகள் மூடப்படும் போது வாகனங்கள் நெருக்கடியில் சிக்கிவிடுகின்றன. இதிலிருந்து வாகனங்கள் மீண்டு வருவதற்கு ஒரு மணிநேரம் ஆகி விடுகிறது.

    ரெயில்வேகேட் மூடப்படும் போது, மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகள் காரணமாக, திக்கி திணறி சேலம் மாநகரைச் சுற்றி வந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வர வேண்டியுள்ளது.

    எனவே, நெடுஞ்சா லைத்துறை, மாநகராட்சி காவல்துறை, ஆகியவற்றை மாவட்டநிர்வாகம் ஒருங்கிணைத்து, உரிய மாற்றுப் பாதையை ஏற்படுத்தி, சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும்.

    இதேபோல், அம்மாப்பேட்டை-உடையாப்பட்டி சாலை குறுகலாகவும், குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. அதையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.

    Next Story
    ×