search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று ஒரே நாளில் ரூ.52 லட்சத்திற்கு வியாபாரம்- பாளை உழவர் சந்தைகளில் 104 டன் காய்கறிகள் விற்பனை
    X

    மகாராஜாநகர் உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதை படத்தில் காணலாம்.

    இன்று ஒரே நாளில் ரூ.52 லட்சத்திற்கு வியாபாரம்- பாளை உழவர் சந்தைகளில் 104 டன் காய்கறிகள் விற்பனை

    • நேற்று மகாராஜாநகர் மற்றும் என்.ஜி.ஓ. காலனி உழவர் சந்தைகளில் நேற்று மட்டும் 85 டன் காய்கறிகள் விற்பனையானது.
    • மகராஜாநகர் உழவர் சந்தையில் இன்று ரூ.32 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.

    நெல்லை:

    பாளை உழவர்சந்தைகளில் கடந்த 2 நாட்களாகவே காய்கறிகள் விற்பனை டன் கணக்கில் நடைபெற்று வருகிறது. நேற்று மகாராஜாநகர் மற்றும் என்.ஜி.ஓ. காலனி உழவர் சந்தைகளில் நேற்று மட்டும் 85 டன் காய்கறிகள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

    இன்றும் அதிகாலை முதலே உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் பொதுமக்கள் நேரடியாகவே காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மகராஜாநகர் உழவர் சந்தையில் இன்று 74 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. சுமார் 120 விவசாயிகள் கொண்டு வந்த இந்த காய்கறிகளை பொதுமக்கள் சுமார் 13 ஆயிரம் பேர் வாங்கி சென்றனர். இன்று மட்டும் அங்கு ரூ.32 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.

    இதேபோல் என்.ஜி.ஓ. காலனியில் தொடங்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் இன்று ஒரு நாளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 30 டன் காய்கறிகள் விற்று தீர்ந்தன. அங்கு மட்டும் 10 ஆயிரம் பேர் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர் என்று உழவர் சந்தை மேலாண்மை அலுவலர் பாப்பாத்தி, உதவி மேலாண் அலுவலர் உத்தமன் ஆகியோர் தெரிவித்தனர்.

    Next Story
    ×