என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் குழாய் அருகே மண்டியுள்ள புதர்கள்
    X

    குடிநீர் குழாய் அருகில் புதர்கள் மண்டியுள்ள காட்சி.

    குடிநீர் குழாய் அருகே மண்டியுள்ள புதர்கள்

    • புல், பூண்டுகள் ஏராளமாய் மண்டிய நிலையில் புதர்களாக காட்சி அளிக்கின்றன.
    • கிராமமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அரையபுரம் கேட்டுத்தெரு பகுதியில் தெருவாசிகள் பயன்படுத்தி வரும் குடிநீர் பம்புகள், மினிடேங்க் அருகே புல், பூண்டுகள், ஏராளமாய் மண்டிய நிலையில் புதர்களாக காட்சி அளிக்கின்றன.

    இதனால் குடிநீர் பம்புகளை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் மினிடேங்க் மற்றும் குடிநீர் குழாய் அருகே மண்டியுள்ள புல், பூண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×