என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மேலப்பாளையத்தில் துணிகரம்- சூப்பர் மார்க்கெட்டில் ஷட்டரை உடைத்து திருட்டு
  X

  மேலப்பாளையத்தில் துணிகரம்- சூப்பர் மார்க்கெட்டில் ஷட்டரை உடைத்து திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற ஊழியர் இன்று கடையை திறக்க வந்த போது ஷட்டர் திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

  நெல்லை:

  நெல்லை ரெட்டியார்பட்டி பால் பண்ணை சிவசக்தி நகரை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி ராமபிரபா (வயது 35). இவர்கள் வண்ணார்பேட்டை தெற்கு பை-பாஸ் சாலையில் குறிச்சி சிக்னல் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றனர்.

  கடை ஊழியர் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்றார். இன்று காலை அவர் கடையை திறக்க வந்த போது ஷட்டர் திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  மேலும் ஷட்டரின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதுகுறித்து அவர் ராம பிரபாவுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த அவர் இதுபற்றி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கடைக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நள்ளிரவில் கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×