என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி பள்ளியில் ரூ.2.33 கோடியில் 11 வகுப்பறை கட்டிடங்களுக்கு பூமி பூஜை
    X

    கோவில்பட்டி பள்ளியில் ரூ.2.33 கோடியில் 11 வகுப்பறை கட்டிடங்களுக்கு பூமி பூஜை

    • பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார்.
    • கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 11 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர் உலகராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் வரவேற்றார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்து கொண்டு ரூ.2.33 கோடி மதிப்பிலான வகுப்பறை கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முத்து முருகன், கவுரி, ஒப்பந்தக்காரர் தங்கராசு, ஆசிரியர்கள் சீனிவாசன், மோகன்ராஜ், சென்னப்பன், சரவணசெல்வி உள்பட அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×