என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் கே.பி.ராமலிங்கம் கைது - எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர்
    X

    மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கே.பி.ராமலிங்கம்

    சேலத்தில் கே.பி.ராமலிங்கம் கைது - எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர்

    • கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மருத்துவமனையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.
    • அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமானவர் கே.பி.ராமலிங்கம். இவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க பூட்டை உடைத்து நினைவிடத்துக்குள் சென்றார். இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் கே.பி.ராமலிங்கம் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் கே.பி.ராமலிங்கத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 11 மணிக்கு அழைத்து வந்தனர்.

    ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஈ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவலறிந்த பா.ஜ.கவினர் மருத்துவமனையில் திரண்டு, கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போலீசார் பேசி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியது.

    Next Story
    ×