என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூமிபூஜை நடந்தபோது எடுத்த படம்.
கயத்தாறில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் உலர்களம் அமைக்க பூமி பூஜை
- கயத்தாறு பேரூராட்சி பகுதியில் வளமீட்பு மற்றும் திடக்கழிவு வளாகத்தில் உலர் களம் கட்டிடப்பணிகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- இதனை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சி பகுதியில் வளமீட்பு மற்றும் திடக்கழிவு வளாகத்தில் உலர் களம் அமைக்க ரூ. 20 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் சபுரா சலீமா, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார்பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமிஅந்தோணி, முன்னாள் நகரச் செயலாளர் இஸ்மாயில், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் வக்கீல் மாரியப்பன் மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஷேக் தாவுது, பூலையா, சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






