என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவசக்தி வித்யாலயா பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா
- ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய கவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய மொழி விழா கொண்டாடப்பட்டது
- பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் மாணவர்கள் சார்பில் குழு நாடகமும் அரங்கேறியது
தென்காசி:
ஆவுடையானூர் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய கவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய மொழி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் நித்யா தினகரன் மற்றும் துணை முதல்வர் ரோஸ்லின் சிங் தலைமை தாங்கினார். விழாவில் ஆசிரியை தங்க ஜெயா வரவேற்றார்.
விழாவில் பொன் முருகேசி, பன்மொழியின் முக்கியத்துவத்தையும், மாநிலங்களின் ஒற்றுமையும் கூறி எடுத்துரைத்தார்.
நம் இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு அதில் ஒன்று பன்மொழித்தன்மை. அப்பன்மொழி தன்மையை வளர்க்கும் விதமாக பாரதிய மொழி விழாவில் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவ- மாணவிகள் பல்வேறு மாநிலங்களின் ஆடை அலங்கார ஒப்பனை களுடன் பள்ளிக்கு வருகை புரிந்து இருந்தனர். பின்பு ஒவ்வொரு மாநிலத்தின் மொழிகளில் வரவேற்பது, நல்ல கருத்துக்களை கூறுவது, உபசரிப்பது, பொன்மொழிகள் கூறுவது ஆகியவற்றை செய்து காட்டியது பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருந்தது. மேலும் பிற மாநிலங்களில் உள்ள உணவு வகைகளை செய்து விற்பனையகம் அமைத்தும் காட்டி இருந்தனர். மாணவர்கள் மகாகவி பாரதியாரின் திருவுருவத்தை ஓவியமாக வரைந்து தங்களின் கைவினை வண்ணத்தில் மெருகேற்றினர். மேலும் எனது மொழி எனது கையெழுத்து என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் மொழிகளில் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கரும்பலகையில் தங்களது கையெழுத்துக்களை பொறித்தனர். பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் மாணவர்கள் சார்பில் குழு நாடகமும் அரங்கேறியது. ஆசிரியை தீபா பூமணி நன்றி கூறினார்.