என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
- சமீபகாலமாக வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது, வன விலங்குகள் தற்காத்து கொள்வதற்காகவே தாக்குதலில் ஈடுபடும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி ஆகியவை பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப்பகுதிகளில் இரவு, பகல் நேரங்களில் சா்வசாதாரணமாக திரிகின்றன.
இதனால் அங்கு மனிதன்-விலங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட வன அலுவலா் கவுதம் உத்தரவின் பேரில் குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் தலைமையில் குன்னூா் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது, வன விலங்குகள் தற்காத்து கொள்வதற்காகவே தாக்குதலில் ஈடுபடும். அவைகளிடம் இருந்து நாம் எப்படி விலகிச் செல்ல வேண்டும் என்று வனச் சரகா் விளக்கிக் கூறினாா். மேலும் காடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறி வருவதால், அங்கு உள்ள விலங்குகள் போக்கிடம் இன்றி நகரப் பகுதிக்குள் நுழைவதாக கூறினார்.
கூட்டத்தில் குன்னூா் வனவா்கள் கோபாலகிருஷ்ணன், ராஜ்குமாா் வனக்காப்பாளா்கள் திலீப், ஞானசேகா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






