search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்
    X

    விழிப்புணர்வு ஸ்டிக்கர்களுடன் உலாவரும் பஸ்களை படத்தில் காணலாம்.

    ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்

    • இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
    • இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஸ்டிக்கர்களால் அலங்கரிக்ப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

    கே.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி, செல்வம் கல்லூரி, காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதி மேல்நிலைப்பள்ளி, செல்வம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×