search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் தடுப்பு குறித்து  விழிப்புணர்வு பயிலரங்கம்
    X

    விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்த போது எடுத்தபடம்.

    போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம்

    • போதை தடுப்பு குறித்து தேசிய பசுமை படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் சிறப்புரையாற்றினார்.
    • குழந்தை திருமணம் மற்றும் மகளிர் உதவி எண் 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவுரையின் படி, சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் இணைந்து சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் மகளிர் உதவி எண் 181 மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் உடையார் வரவேற்று பேசினார். போதை தடுப்பு குறித்து தேசிய பசுமை படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கணபதி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர் ஞானவேல், ராணி, மாவட்ட குழந்தை அலுவலக சமூக பணியாளர் ஹெலினா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர்கள் ருக்மணிதேவி, வைகுண்டம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஷேக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதுகலை தமிழாசிரியர் நான்சி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

    Next Story
    ×