என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி-கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
- உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.
- பேரணியில் அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட குடும்ப நலசங்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. அதனை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு ) ராஜேந்திரன், உறைவிட மருத்துவர் சைலஸ், ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வகுமார், மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் பொற்செழியன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






