search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடியில் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி
    X

    வாழப்பாடி பஸ் நிலையம் அருகே ஆசிரியர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    வாழப்பாடியில் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி

    • சேலம் மாவட்டம், வாழப்பாடியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகவதி வரவேற்றார்.

    பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரவிசங்கர், சத்தியக்குமாரி, ஷபிராபானு, வட்டார கல்வி அலுவலர் வித்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தாகுமாரி சரவணன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி குறித்த வாசகங்களை சிறப்பு பயிற்றுநர் வெங்கடேசன் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதனையடுத்து, ஆசிரியர்கள் மீனா, ரவிசங்கர் குழுவினரின் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இவ்விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வி.சி.பாண்டியன், கமல்ராஜா, கோபிநாத், குணாளன், கோ.முருகேசன், தில்லையம்பலம், ரமணி, சுந்தரராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் ராஜிவ்காந்தி, மனோகரி, சிறப்பு பயிற்றுநர்கள் உலகநாதன், காளியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணியை, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இலியாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுநர்கள் அசோக்ராஜ், சாகிதாபானு, சிறப்பு பயிற்றுநர்கள் தேன்மொழி, ஆனந்தி ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×