என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு
    X

    தீ விபத்து தடுப்பது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

    தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு

    • தீ விபத்து தடுப்பது குறித்து ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பிகா, ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீ விபத்து தடுப்பது குறித்து ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அலுவலர் பச்சையப்பன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சரவணகுமார், ராஜ்குமார், பொண்மணி ஆகியோர் மாணவிகளுக்கு மழைக்காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, தீ விபத்து ஏற்படும் போது அதனை எவ்வாறு கையாள்வது, நீர் நிலைகளில் தவறி விழுந்தவர்களை எவ்வாறு விரைந்து மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பிகா, ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×