search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லிட்டில் பிளவர் பள்ளியில் கணித அறிவுத்திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு
    X

    லிட்டில் பிளவர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.


    லிட்டில் பிளவர் பள்ளியில் கணித அறிவுத்திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு

    • டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் மாடல் மேல்நிலைப்பள்ளியில் கணித அறிவுத்திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நெல்லை:

    டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் மாடல் மேல்நிலைப்பள்ளியில் கணித அறிவுத்திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மரியசூசை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் டெவலப்மென்ட் பவுண்டேஷன் பிராங்கலின் கலந்து கொண்டார்.

    இதில் நடமாடும் கணினி என்று அழைக்கப்படும் பசவராஜ் சங்கர் உம்ராணி கலந்து கொண்டு மாணவர்களின் கணித அறிவினை ஊக்குவிக்கும் வகையில் 9 இலக்க எண்களின் கூட்டல், கழித்தல், 5 மற்றும் 3 இலக்க எண்களின் கூட்டல், வகுத்தல் உள்ளிட்டவற்றை விளக்கி கூறினார். மேலும் மாணவர்களின் பிறந்ததேதியை வைத்து அவர்களின் பிறந்த கிழமையையும், 30 இலக்க எண்களின் வரிசை முறையை முன்வரிசையிலும், பின் வரிசையிலும் சில நொடிகளில் கூறினார்.

    அதேபோல் கடிகார உதவியின்றி நேரத்தை சரியாக கூறினார். அவரை பாராட்டி பள்ளி தாளாளர் மரியசூசை ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மேலும் இந்தியன் டெவலப்மென்ட் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு காசோலையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


    Next Story
    ×