என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
- பேராவூரணி வட்டாரத்தில் 15 இடங்களில் பிரச்சார வாகன விழிப்புணர்வு நடைபெற்றது.
- அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு குறித்து எடுத்து கூறப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமையில் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர்கள் கலாராணி, அங்கையர்கண்ணி ஆகியோர் பெற்றோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேம்பையன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண், இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் மற்றும் தன்னார்வலர்கள் சந்ரோதயம், ராஜேஸ்வரி, தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேராவூரணியில் நடைபெற்ற பிரச்சார வாகன தொடக்க நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுனர்கள் சரவணன், முனிசாமி, சிவமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி வட்டாரத்தில் 15 இடங்களில் பிரச்சார வாகன விழிப்புணர்வு நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு, 14 வகையான விலையில்லா நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.






