search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி அமிர்தீன் பேசினார்.

    கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

    • ஆண், பெண் சொத்தில் சமபங்கு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.
    • சட்டத்தில் இருக்கும் சில ஆர்டிக்கிள் மற்றும் செக்சன்களை வரிசைபடுத்தி விளக்கினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் ஏ.ஆர்.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாமை கல்லூரியில் நடத்தியது. ஏ.ஆர்.ஜெ. கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நீதித்துறை நடுவர் எண்:1 மன்னார்குடி அமிர்தீன் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் சில ஆர்டிக்கிள் மற்றும் செக்சன்களை வரிசைபடுத்தி விளக்கி கூறினார். சதி 'உடன்கட்டை ஏறுதல்' என்பது சட்டத்தால் உடைக்கப்பட்டது. குழந்தை திருமண ஒழிப்பு, ஆண், பெண் சொத்தில் சமபங்கு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.

    அனைத்து மாணவர்களும் போதை ஒழிப்பு உறுதி மொழியை நீதிபதி முன்பு எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கத்தை அளித்தார். இதில் மேலாண்மை கல்லூரி இயக்குநர் செல்வராஜ், அட்மிஷன் அலுவலர் துரை முருகன், என்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சந்துரு, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    Next Story
    ×