என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்துறை சார்பில் பந்தலூரில் மனித விலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வு
    X

    வனத்துறை சார்பில் பந்தலூரில் மனித விலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வு

    • நிகழ்ச்சிக்கு வனசரகர் சஞ்சீவி தலைமை தாங்கினார்.
    • பொம்மை கலைகுழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஊட்டி,

    கூடலூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கூடலூர் வன கோட்ட உதவி வன பாதுகாவலர் வழி காட்டுதலின் படி பந்தலூர் வன சரகத்தில் மனித விலங்கு மோதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வனசரகர் சஞ்சீவி தலைமை தாங்கினார். வனவர் செல்லதுரை, வனக்காப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யானைகள் மனித மோதலை பற்றியும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் பொம்மை கலைகுழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பொன்னுர், கைதக்கொல்லி, தேவாலா அட்டி, வாழவயல், கண்ணா கடை, டேன்டீ 4, அத்திமாநகர், கூமூலா, மாங்கோ ரேஞ்சு ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வேட்டை தடுப்பு காவலர்கள் யானை கண்காணிப்பு குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள், தேயிலை தோட்டதொழிலாளர்கள், வட மாநில தொழிலாளர்கள், ஜீப் ஆட்டோ டிரைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×