என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்து குறித்து விழிப்புணர்வு
- வாகனங்களை ஓட்டி செல்லும் பொழுது பாதுகாப்புடன் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.
- பருவ மழை பெய்யும் காலங்களில் நீர் நிலைகளில் யாரும் செல்லக்கூடாது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் மூலமாக பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தீ தடுப்பு குறித்து செயல்முறை விளக்கங்கள் மாணவ, மாணவிகளிடையே ஏற்படுத்தப் பட்டது.
தீ விபத்து பகுதிகளில் யாரிடம் சிக்கிக் கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது தீ விபத்துகளில் ஏற்பட்ட தீயினை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து செயல்முறை விளக்கங்களுடன் தனியார் அரசு தேர்வு பயிற்சி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சிறப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி செயல்முறை விளக்கங்களை ஏற்படுத்தினார்.
மேலும் பருவ மழை பெய்யும் காலங்களில் நீர் நிலைகளில் யாரும் செல்ல க்கூடாது எனவும் வாகனங்களை ஓட்டி செல்லும் பொழுது பாதுகாப்புடன் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் என பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது. இந்த நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.






