search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்கள் ஏலம்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்கள் ஏலம்

    • ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    திருவாரூர்:

    குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்கள் ஏலம் என உதவி ஆணையர் (கலால்) அழகர்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு-ஆயத்தீர்வை விதிகளின்படி பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து அரசுக்கு ஆதாயம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பொது ஏலமானது திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு, திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமல்பிரிவு), தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

    பொது ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள் ஏலம் கோராதபட்சத்தில் பொது ஏலம் விடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவர்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் முன்பணத்தொகையாக ரூ.1000 வருகிற 30-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் நேரில் செலுத்த வேண்டும்.

    வாகனங்களை பொது ஏல அடிப்படையில் ஏலம் எடுத்து கொள்ளலாம்.

    அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் ஏலத்தில் கலந்து கொள்ள செலுத்தப்பட்ட முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    அதிக விலை கோருபவர்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×